மேலும் செய்திகள்
மின் வாகன 'சார்ஜிங்' வசதி; 5வது இடத்தில் தமிழகம்
23-Dec-2024
ஆவடி, ஆவடி மத்திய ரிசர்வ் காவல் படை குழு மையத்தில் 14வது 'ரோஜ்கர் மேளா' நிகழ்ச்சி நடந்தது. மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் தகவல் தொடர்பு இணை அமைச்சர் சந்திரசேகர் பெம்மாசானி, தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த, 413 பேருக்கு பல்வேறு துறைகளில் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.சந்திர சேகர் பெம்மாசானி பேசியதாவது:இந்தியா '5ஜி'க்கு தேவையான உபகரணங்களை தயாரிப்பதில், நான்காவது இடத்தில் உள்ளது. அமெரிக்கா, ரஷ்யா முதல் ஐந்து இடங்களை கூட பிடிக்கவில்லை. புதிய வாய்ப்புகளை உருவாக்கி கொடுக்க கூடிய மாநிலம், தமிழகம். நாட்டின், ஆட்டோமொபைல் துறையில், தமிழகத்தின் பங்களிப்பு 10 சதவிகிதமாக உள்ளது. இங்கு, ஆறு லட்சம் பேர் ஐ.டி., துறையில் பணி புரிகின்றனர்.பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்ததுக்கு பிறகு, நிர்வாகம் முற்றிலும், வெளிப்படை தன்மையுடன் செயல்படுகிறது.இவ்வாறு அவர் பேசினார்.
23-Dec-2024