உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / விவசாயி வீட்டில் 45 சவரன் கொள்ளை

விவசாயி வீட்டில் 45 சவரன் கொள்ளை

சிங்கபெருமாள் கோவில்,சிங்கபெருமாள் கோவில் அருகே, விவசாயியின் வீடு புகுந்து 45 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.சிங்கபெருமாள் கோவில் அடுத்த வடகால் கிராமத்தைச் சேர்ந்தவர் கன்னியப்பன், 67; விவசாயி. இவர், நேற்று முன்தினம் மாலை, மாடு வாங்க வேலுார் சந்தைக்குச் சென்றுள்ளார். வீட்டில் அவரது மனைவி விஜயலட்சுமி, 54, மற்றும்மகள் இருந்துள்ளனர். இருவரும், வீட்டின் முன்பக்க வராண்டாவில் துாங்கிஉள்ளனர்.நேற்று அதிகாலை 2:00 மணியளவில், விஜயலட்சுமி எழுந்து, வீட்டின் பின்பக்கம் உள்ள கழிப்பறைக்குச் சென்றபோது, பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரிந்தது.உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 45 சவரன் நகைகள் மற்றும் எட்டு பட்டு புடவைகள் திருட்டு போனது தெரிந்தது. செங்கல்பட்டு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை