மேலும் செய்திகள்
கடலுாரில் திடீர் தீ விபத்து
10-Sep-2024
சென்னை, நந்தனத்தைச் சேர்ந்தவர் முகமது மசூர், 30. இவர், ராமாபுரம், நடேசன் நகரில் கார் பழுது நீக்கும் ஷெட் வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு ஷெட்டை மூடிச் சென்றார். இந்த நிலையில், நேற்று அதிகாலை ஷெட்டில் தீ விபத்து ஏற்பட்டது.விருகம்பாக்கம் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து, ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.இந்த விபத்தில், பழுது பார்ப்பதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாடிக்கையாளர்களின் ஐந்து கார்கள் எரிந்து நாசமாயின. மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என, ராமாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
10-Sep-2024