உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மோப்ப நாய்களுக்கு 5 பரிசுகள்

மோப்ப நாய்களுக்கு 5 பரிசுகள்

சென்னை, வளர்ப்பு நாய்களுக்கான கண்காட்சியில், சென்னை காவல்துறையை சேர்ந்த மோப்ப நாய்கள், ஐந்து பரிசுகளை பெற்று அசத்தின.சென்னை மயிலாப்பூரில், வளர்ப்பு நாய்களுக்கான கண்காட்சி, 18, 19ம் தேதிகளில் நடந்தது. கீழ்படிதல், திறமைகள் என்ற அடிப்படையில் நாய்களுக்கிடையே போட்டிகள் நடத்தப்பட்டது. இதில், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த நாய்கள் பங்கேற்றன. போட்டியில், சென்னை காவல்துறையின் மோப்ப நாய் படை பிரிவை சேர்ந்த, மோப்ப நாய்கள், கீழ்படிதல் பிரிவில் ஐந்து பரிசுகளை வென்று அசத்தியது. இந்த மோப்ப நாய்களை கையாண்ட ஐ.எஸ்.,க்கள் கோமேதகவேலு, நாராயணமூர்த்தி, அகோரம், தலைமை காவலர்கள், முருகன், செந்தில், முதல்நிலை காவலர்கள் பிரபாகரன், ஷாம் குமார் ஆகியோரை சந்தித்து, போலீஸ் கமிஷனர் அருண் பாராட்டு தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !