மேலும் செய்திகள்
வீடு ஒப்படைப்பு தாமதம் ரூ.5 லட்சம் இழப்பீடு
25-Sep-2024
சென்னை, சென்னை அடுத்த திருவேற்காடு பகுதியில், 'வி.ஜி.என்., பிராப்பர்ட்டீஸ் எஸ்டேட்ஸ்' நிறுவனம் சார்பில், அடுக்குமாடி குடியிருப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இதில் வீடு வாங்க, 2015ல் கீதா கேசவன்கர்த்தா என்பவர், ஒப்பந்தம் செய்தார். வீட்டின் விலை, 48.43 லட்சம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டது. பின், 63.32 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. ஒப்பந்தப்படி, 2016ல் வீட்டை ஒப்படைப்பதாக, கட்டுமான நிறுவனம் தெரிவித்திருந்தது. 2021ல் ஒப்படைக்க முன்வந்தது. இது தொடர்பாக, கீதா கேசவன்கர்த்தா, ரியல் எஸ்டேட் ஆணையத்தில் முறையிட்டார். ஆணையத்தின் விசாரணை அலுவலர் உமா மகேஸ்வரி பிறப்பித்த உத்தரவு:ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்ட கால கெடுவுக்குள், கட்டுமான நிறுவனம் வீட்டை ஒப்படைக்காதது உறுதியாகிறது.வீட்டின் விலையை உயர்த்தியதுடன், மேலும், கூடுதல் தொகையை கேட்டு நிர்பந்தப்படுத்தி உள்ளது. வீட்டை ஒப்படைக்க தாமதித்ததால் மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நிவாரணமாக, 5 லட்சம் ரூபாய் இழப்பீடு தர வேண்டும். வழக்கு செலவுக்காக, மனுதாரருக்கு, 50,000 ரூபாயை நிறுவனம் அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
25-Sep-2024