கல்லுாரி மாணவரிடம் வழிப்பறி சிறுவன் உட்பட 5 பேர் கைது
ஆவடி, நவ. அம்பத்துார், லெனின் நகரைச் சேர்ந்தவர் ஜெயதேவ், 20; தனியார் கல்லுாரியில் பி.டெக்., மூன்றாமாண்டு படித்து வருகிறார். இவர், கடந்த 12ம் தேதி இரவு 7:30 மணியளவில், நண்பர் ராஜா என்பவரை பார்க்க அண்ணனுார் சென்றார். அங்கு, அண்ணா தெருவில் பதுங்கி இருந்த மர்ம நபர்கள், அவரை மிரட்டி, பீர் பாட்டிலால் தலையில் அடித்து, அவரது 'ஜிபே'யில் இருந்து 29,000 ரூபாயை தங்கள் வங்கி கணக்கிற்கு அனுப்பிக் கொண்டு தப்பிச் சென்றனர். பலத்த காயமடைந்த ஜெயதேவுக்கு, தலையில் எட்டு தையல் போடப்பட்டது.இதுகுறித்து விசாரித்த திருமுல்லைவாயில் தனிப்படை போலீசார், திருமுல்லைவாயிலைச் சேர்ந்த ராஜா, 22, ஜெயசூர்யா, 20, கபிலேஸ்வரன், 18, ஆவடி கோவில்பதாகையைச் சேர்ந்த லலித்குமார், 22, மற்றும் 17 வயது சிறுவன் உட்பட 5 பேரை, நேற்று கைது செய்து 25,000 ரூபாயை பறிமுதல் செய்தனர்.