உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மண்டல போட்டிக்கு 5 மாணவர்கள் தகுதி

மண்டல போட்டிக்கு 5 மாணவர்கள் தகுதி

சென்னை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், முதல்வர் கோப்பைக்கான தடகள போட்டிகள், பெரியமேட்டில் உள்ள நேரு விளையாட்டு அரங்கில் நேற்று முன்தினம் துவங்கின. இதில், சென்னை மாவட்ட பள்ளிகளை சேர்ந்த, 900க்கும் அதிகமான மாணவ - மாணவியர் பங்கேற்று வருகின்றனர். ஆடவருக்கான 100 மீ., ஓட்டப் பந்தயத்தில் சச்சின், கிரிஸ் ஜோர்டன்; 400 மீ., ஓட்டத்தில் கிருதிஷ், தர்ஷன்; 1,500 மீ., ஓட்டத்தில் உதயச்சந்திரன், விஷால் ஆகியோர் முறையே முதல் இரு இடங்களை பிடித்தனர். தொடர்ந்து நடந்த டிரிப்பில் ஜம்ப் போட்டியில் சுஜன், தர்ஷன்; குண்டு எரிதல் போட்டியில் ஆரோன் சாமுவேல், சோமேஸ்வரன் ஆகியோர் முதல் இரு இடங்களை பிடித்தனர். போட்டிகளில் முதல் இடம் பிடித்த சச்சின், கிருதிஷ், உதயச்சந்திரன், சுஜன், ஆரோன் சாமுவேல் ஆகிய ஐந்து பேரும், அடுத்து நடக்க உள்ள மண்டல போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி