உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 500 கிலோ குட்கா பறிமுதல்

500 கிலோ குட்கா பறிமுதல்

அம்பத்துார், அத்திப்பட்டு பகுதியில் உள்ள செல்வராஜ், 30, என்பவரது மளிகை கடையில் அம்பத்துார் தொழிற்பேட்டை போலீசார் ஆய்வு செய்தனர். கடையிலிருந்து 10 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் மொத்த வியாபாரியான மாரி, 45, என்பவரிடமிருந்து குட்காவை வாங்கி விற்றது தெரிந்தது. இதைத் தொடர்ந்து, மாரியின் வீட்டில் சோதனை நடத்தி, 500 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ