உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாநில மாற்றுத்திறனாளி போட்டி: 500 மாணவர்கள் பங்கேற்பு

மாநில மாற்றுத்திறனாளி போட்டி: 500 மாணவர்கள் பங்கேற்பு

சென்னை: சென்னையில், மாநில அளவிலான மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டியை அமைச்சர் ஜெகதீஸ்வரி நேற்று தொடங்கி வைத்தார். தமிழ்நாடு மாற்றுத்திறனாளி சங்கம் சார்பில், மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் பெரியமேடில் உள்ள நேரு விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கின. நாளை வரை நடைபெறும் இப்போட்டிகளில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றுள்ளனர். இதில், 8 முதல் 16 வயது என பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. தடகளம், அறிவுசார் போட்டிகள் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட விளையாட்டுகளில், மூன்று பிரிவுகளாகப் போட்டிகள் நடைபெறுகின்றன. பார்வைக் குறைபாடு, உடல் இயக்கக் குறைபாடு, அறிவுசார் குறைபாடு உடையோர் என மூன்று பிரிவுகளாக மாணவர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். போட்டிகளில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனையருக்குப் பரிசுகள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !