உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சாலையில் படுத்துறங்கிய 5,000 அக்னி வீரர் தேர்வர்கள்

சாலையில் படுத்துறங்கிய 5,000 அக்னி வீரர் தேர்வர்கள்

தாம்பரம்:கிழக்கு தாம்பரம், இந்திய விமானப்படை பயிற்சி மையத்தில், அடிப்படை வசதிகள் செய்யப்படாததால், அக்னி வீரர்கள் தேர்வு முகாமில் பங்கேற்க வந்த 5,000த்துக்கும் மேற்பட்டோர், சாலையில் படுத்துறங்க வேண்டிய அவலத்திற்கு தள்ளப்பட்டனர். இந்திய விமானப்படைக்கான அக்னி வீரர்கள் தேர்வு முகாம், ஆக., 27, 30 மற்றும் செப்., 2, 5 ஆகிய தேதிகளில் நடக்கிறது. நேற்று, கேரளா, கர்நாடகா மாநிலங்களை சேர்ந்த 5,000 பேர், கிழக்கு தாம்பரத்தில் உள்ள விமானப்படை பயிற்சி மையத்தில் கூடினர். இதற்காக, இந்திய விமானப்படை பயிற்சி மையத்திற்கு செல்லும் சாலையில் தடுப்புகள் அமைத்து, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அடையாள அட்டை, உடைமைகளை சோதனை செய்த பின், தேர்வர்கள் வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், நான்கு நாட்கள் நடைபெறும் இத்தேர்வுக்காக, பலர் முன்கூட்டியே இங்கு குவிந்துள்ளனர். அவர்களுக்கு ஏற்ப குடிநீர், கழிப்பறை போன்ற வசதிகள், போதுமான அளவில் செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், காலி இடங்கள், சாலைகளில் இயற்கை உபாதைகளை கழிக்கும் சூழல் ஏற்பட்டது. அதுமட்டுமின்றி, நேற்று முன்தினமே குவிந்த இளைஞர்கள், இரவில் சாலை ஓரங்களிலும், பூங்காவிலும் படுத்துறங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை