மேலும் செய்திகள்
பஸ்சில் புகையிலை பொருள் கடத்திய இரண்டு பேர் கைது
18-Apr-2025
நீலாங்கரை, சின்னநீலாங்கரை, சிங்காரவேலன் 8வது குறுக்கு தெருவில், ஒரு வீட்டில், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பதாக, நீலாங்கரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.நேற்று முன்தினம், அந்த வீட்டை சோதனை செய்தபோது, 54 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் இருந்தன.இதை, மதுயிர் ரஹ்மான், 28, வெளி மாநிலங்களில் இருந்து கடத்தி வந்து, சில்லறையாக விற்பனை செய்வது தெரிந்தது.இதையடுத்து, போலீசார் குட்காவை பறிமுதல் செய்து, மதுயிர் ரஹ்மானை கைது செய்து விசாரிக்கின்றனர்.
18-Apr-2025