உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  சிறுமியருக்கு பாலியல் அத்துமீறல்: 58 வயது நபருக்கு 5 ஆண்டு சிறை

 சிறுமியருக்கு பாலியல் அத்துமீறல்: 58 வயது நபருக்கு 5 ஆண்டு சிறை

சென்னை: மூன்று சிறுமியரிடம் அத்துமீறிய, 58 வயது நபருக்கு, ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதித்து, சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கீழ்ப்பாக்கம் காவல் நிலைய எல்லையில் உள்ள பகுதி ஒன்றில், 2020ம் ஆண்டில், மூன்று சிறுமியர் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு, சாக்லெட் வாங்கித் தருவதாக கூறிய 58 வயது நபர், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். இதுகுறித்து, சிறுமியரின் பெற்றோர், கீழ்ப்பாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பின், போலீசார் விசாரித்து, 58வயது நபரை, பாலியல் குற்றங்களில் இருந்து சிறுமியரை பாதுகாக்கும், 'போக்சோ' சட்டத்தில் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில், 'போக்சோ' வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. குற்றம் நிரூபிக்கப்பட்டதால், 58 வயது நபருக்கு, ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, நீதிமன்றம் உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி