உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தி.நகர் வேதாந்த பவனத்தில் 6 நாள் யஜுர்வேத மூல பாராயணம் துவக்கம்

தி.நகர் வேதாந்த பவனத்தில் 6 நாள் யஜுர்வேத மூல பாராயணம் துவக்கம்

சென்னை, கார்த்திகை மாதத்தை முன்னிட்டு, உலக நன்மைக்காக, தி.நகர்., வேதாந்த பவனத்தில், ஸ்ரீ யஜுர்வேத மூல பாராயணம் ஆறு நாட்களுக்கு விமரிசையாக துவங்கியது.சென்னை, தி.நகர் ராமானுஜம் தெருவில் உள்ள வேதாந்த பவனத்தில்,ஆண்டுதோறும் வேத பாராயணம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு, ஸ்ரீயஜூர் வேத மூல பாராயணத்தை, நேற்று விஷ்வ ஹிந்து பரிஷத் அகில உலக முன்னாள் தலைவர் வேதாந்தம் துவக்கி வைத்தார்.தொடர்ந்து ஆறு நாட்கள் நடத்தப்படும் இந்த பாராயணம், தினசரி காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடத்தப்படுகிறது.வேதபாராயணம் குறித்து வேதாந்தம் கூறியதாவது:வேதம் என்பது பெரிய கடல். கார்த்திகை மாதம் வேதம் பாராயணம் செய்வது மிகவும் விசேஷமானது. நாட்டிற்கும், ஜீவராசிகளுக்கும் நல்லது என கூறப்படுகிறது. கடந்த ஒன்பது ஆண்டுகளாக இந்த பாராயணம் நடத்தப்படுகிறது.நான்கு வேதங்களில் ஒன்று ஸ்ரீ யஜுர்வதே பாராயணம். இதை, ஏழு கனபாடிகள் இணைந்து பாராயணம் செய்கின்றனர்.முற்காலத்தில், வேதங்களை எழுதி வைக்கவோ, பதிவு செய்யவோ வசதியில்லை. அதனால், பாராயணம் செய்ய, அதை செவி வழிகேட்டு நினைவில் வைத்து, மீண்டும் பாராயணம் செய்யும் பழக்கம்குருகுலம், சந்தையில் இருந்தது.அந்த பாரம்பரியத்தை மீட்பதற்காகவும், உலக நன்மைகக்காகவும், தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இந்த பாராயணம் நடத்தப்படுகிறது. இந்த பாராயணத்தை கேட்பவர்களும் பயனடைவர்.இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி