உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கதவை உடைத்து 7 சவரன் திருட்டு

கதவை உடைத்து 7 சவரன் திருட்டு

சேலையூர், மாடம்பாக்கம், பெரியார் நகர், மூவேந்தர் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 52. இவரது மருமகளுக்கு சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது.குழந்தையை பார்ப்பதற்காக, நேற்று முன்தினம் காலை சென்றார். இரவு திரும்பி வந்தபோது, வீட்டின் கிரில் கேட்டை திறந்து, அதன் வழியாக உள்ளே புகுந்த மர்ம நபர்கள், கதவை உடைத்து, பீரோவில் இருந்த ஜிமிக்கி, மோதிரம் உள்ளிட்ட ஏழரை சவரன் நகை மற்றும் 2,500 ரூபாயை திருடி சென்றது தெரிந்தது. இதுகுறித்து சேலையூர்போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை