உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குடோனில் ரூ.17 லட்சம் மதிப்பு காப்பர் ஒயர் திருடிய 8 பேர் கைது

குடோனில் ரூ.17 லட்சம் மதிப்பு காப்பர் ஒயர் திருடிய 8 பேர் கைது

குன்றத்துார், குன்றத்துார் அருகே மலையம்பாக்கத்தில் உள்ள, தனியார் தொழிற்சாலை குடோனில், 36 பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த, 17 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 1,816 கிலோ காப்பர் ஒயர்கள் காணாமல் போனது. அதிர்ச்சி அடைந்த நிர்வாகம், கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, தொழிற்சாலை விடுமுறை தினத்தில், மினி வேனில் வந்த மர்ம குப்பல், காப்பர் ஒயர்களை திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து, குன்றத்துார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்ததில், மாங்காட்டை சேர்ந்த பழைய பிளாஸ்டிக், இரும்பு கழிவு பொருட்களை சேகரிக்கும் முத்து, 23, கதிரேசன், 42, கவுதம், 19, ஆனந்த், 21, பார்வதி, 44, ஓட்டுனர்கள் பெலிக்ஸ், 42, செல்வம், 26, ஏழுமலை, 44 ஆகிய எட்டு பேரும், மினிவேனில் வந்து, திருடிச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து, எட்டு பேரையும் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். இவர்களிடம் இருந்து மினி வேன், புதிய ஆட்டோ, 50 கிலோ காப்பர் ஒயர்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ