மேலும் செய்திகள்
பயணியர் வருமானத்தில் தெற்கு ரயில்வே முதலிடம்
24-Sep-2025
சென்னை:ஆயுத பூஜை பண்டிகை யொட்டி, சென்னையில் இருந்து இரண்டு நாட்களில், பேருந்துகள் மற்றும் ரயில்கள் மூலம், எட்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர், சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். ஆயுதபூஜை பண்டிகை, இன்று கொண்டாடப்படுகிறது. நாளை, காந்தி ஜெயந்தி என தொடர்ந்து விடுமுறை வருவதால், சென்னையில் இருந்து, நேற்று முன்தினம் மாலை முதல் பலரும், சொந்த ஊருக்கு புறப்பட்டனர். பயணியர் வசதிக்காக, கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் பேருந்து நிலையங்களில் இருந்து, வழக்கமான பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. நேற்றும், பேருந்து நிலையங்களில் பயணியர் கூட்டம் அலைமோதியது. அதேபோல், எழும்பூர், சென்ட்ரல் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களிலும், பயணியர் கூட்டம் நேற்று அலைமோதியது. சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டன. பேருந்து, ரயில் நிலையங்களுக்கு அதிகளவில் பயணியர் சென்றதால், மின்சார ரயில்கள், மெட்ரோ ரயில்களிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. ஆயுத பூஜை பண்டிகையொட்டி, கடந்த இரு நாட்களில் சென்னையில் இருந்து அரசு, ஆம்னி பேருந்துகள் மற்றும் ரயில்கள் மூலம் எட்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர், சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றதாக, ரயில்வே மற்றும் போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
24-Sep-2025