உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாநகராட்சி பள்ளிகளில் 86.10 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி; 12 மாணவர்கள் சென்டம், சைதை பள்ளி மாணவி முதலிடம்

மாநகராட்சி பள்ளிகளில் 86.10 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி; 12 மாணவர்கள் சென்டம், சைதை பள்ளி மாணவி முதலிடம்

சென்னை :சென்னை மாநகராட்சி கல்வித்துறையின் கீழ், 206 தொடக்கம், 130 நடுநிலை, 46 உயர்நிலை மற்றும் 35 மேல்நிலை என, 417 பள்ளிகள் உள்ளன.இவற்றில் 2024 - 25ம் ஆண்டில், 10ம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவர்களில் 86.10 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.சைதாப்பேட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.தேஜஸ்வினி, 500க்கு, 492 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார்.புத்தா தெரு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஏ.ஷோபனா, 491 மதிப்பெண்; சூளைமேடு மேல்நிலை பள்ளி மாணவர் எஸ்.அருண், 487 மதிப்பெண் பெற்று அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளனர்.மேலும், 450 மதிப்பெண்களுக்கு மேல் 190 மாணவர்களும், 400ல் இருந்து 449 வரை, 659 மாணவர்களும், 350 மதிப்பெண்களுக்கு மேல் 1,963 மாணவர்கள் பெற்றுள்ளனர்.

---

தேர்வு எழுதியோர்மாணவர்கள் 3,709 மாணவியர் 3,433 மொத்தம் 7,142 மாணவர்கள் --தேர்ச்சி பெற்றவர்கள்மாணவர்கள் 3,113 மாணவியர் 3,036 --தேர்ச்சி விகிதம்மாணவியர் - 88.44%மாணவர்கள் - 83.93%--கடந்தாண்டு: 79.00 சதவீதம்நடப்பாண்டு: 86.10 சதவீதம்* 7.10 சதவீதம் தேர்ச்சி விகிதம் உயர்வு

100/100 மதிப்பெண்கள்!

பாடம் - எண்ணிக்கைஅறிவியல் - 1சமூக அறிவியல் - 11மொத்தம் - 12

100 சதவீத தேர்ச்சி பள்ளிகள்!

 புரசை ஜி.கோவில் தெரு ஆண்கள் மேல்நிலை பள்ளி நுங்கம்பாக்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி காமராஜபுரம் உயர்நிலைப்பள்ளி கொடுங்கையூர் காமராஜர் சாலை உயர் நிலைப்பள்ளி கண்ணம்மாபேட்டை உயர்நிலைப்பள்ளி பாடிக்குப்பம் உயர்நிலைப்பள்ளி லாய்ட்ஸ் சாலை பெண்கள் மேல்நிலைப்பள்ளி குக்ஸ் சாலை உயர் நிலைப்பள்ளி கீழ்ப்பாக்கம் உயர்நிலைப்பள்ளி கே.பி.தெரு உயர்நிலைப்பள்ளி சேத்துப்பட்டு மெக்நிகோலஸ் சாலை உயர்நிலைப்பள்ளி ரங்கராஜபுரம் உயர்நிலைப்பள்ளி வி.பி.கோவில் தெரு உயர்நிலைப்பள்ளி சூளைமேடு மேல்நிலைப்பள்ளி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி