உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கஞ்சா விற்ற தம்பதி உட்பட 9 பேருக்கு காப்பு

கஞ்சா விற்ற தம்பதி உட்பட 9 பேருக்கு காப்பு

கொடுங்கையூர், கொடுங்கையூர், ஆர்.ஆர். நகர் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக, கொடுங்கையூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, நேற்று முன்தினம் இரவு, அப்பகுதியில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித்திரிந்த மூவரை பிடித்து விசாரித்தனர்.அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். சந்தேகமடைந்த போலீசார், அவர்களை சோதனையிட்ட போது, 100 கிராம் கஞ்சா இருந்தது. விசாரணையில், கொடுங்கையூர், முத்தமிழ் நகரில் தம்பதியிடம் வாங்கி வந்ததாக கூறினர்.அதன் அடிப்படையில், கஞ்சா விற்பனையில் தொடர்புடைய, கொடுங்கையூர், முத்தமிழ் நகரைச் சேர்ந்த சிவா, 49, அவரது மனைவி சுதா, 40, கஞ்சா வைத்திருந்த வியாசர்பாடி, பி.வி., காலனியைச் சேர்ந்த ஸ்டீபன் ஆண்டனி, 27, அமானுல்லா, 19, கரண், 19, ஆகிய ஐந்து பேரையும் கைது செய்தனர்.அவர்களிடமிருந்து, ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணைக்கு பின், ஐந்து பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.கைதான சிவா, ஆந்திராவில் ஒரு கிலோ கஞ்சாவை, 20,000 ரூபாய்க்கு வாங்கி வந்து, சிறு பொட்டலங்களாக்கி, சில்லரை வியாபாரம் செய்து வந்துள்ளார்.

ஓட்டேரி

ஓட்டேரி காவல் நிலையத்துக்கு உட்பட்ட குன்னுார் நெடுஞ்சாலை பகுதியில், போலீசார் சோதனையிட்டனர். அங்கு மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த ஓட்டேரி சந்தியப்பன் தெரு பகுதியைச் சேர்ந்த டில்லி, 65, என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 40 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.இதே போல, ஓட்டேரி ஹைதர் கார்டன் பிரதான சாலை பகுதியில், மதுபாட்டில்கள் விற்ற மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரிஹானா, 38, என்ற பெண் கைது செய்யப்பட்டார்.மேலும் பேசின் பிரிட்ஜ் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா வழக்கில் தலைமறவாக இருந்த பெரம்பூர் ஜமாலியா பகுதியைச் சேர்ந்த ஆதி, 19 என்பவரை பேசின் பிரிட்ஜ் போலீசார் நேற்று கைது செய்தனர்.

புளியந்தோப்பு

புளியந்தோப்பு காவல் நிலையத்துக்கு உட்பட்ட பட்டாளம் பகுதியில் குட்கா விற்பனையில் ஈடுபட்ட புளியந்தோப்பு கே.எம் கார்டன் பகுதியை சேர்ந்த ராஜ்குமார், 34, என்பவர் கைது செய்யப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை