உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 9ம் வகுப்பு மாணவர் மாயம்

9ம் வகுப்பு மாணவர் மாயம்

திருவொற்றியூர்: மணலி, பர்மா நகர் 3வது தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம்; கிரேன் ஆப்பரேட்டர். அவரது மகன் அபினாஷ், 14, மணலிபுதுநகர் தனியார் பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படிக்கிறார். நேற்று காலை 7:30 மணிக்கு வழக்கம் போல், பள்ளிக்கு கிளம்பிய அபினாஷ், பர்மா நகர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து, மீஞ்சூர் நோக்கி செல்லக் கூடிய, தடம் எண்: 56டி மாநகர பேருந்தில் ஏறி பயணித்துள்ளார். இந்நிலையில், காலை 10:00 மணிக்கு, பள்ளிக்கு அபினாஷ் வரவில்லை என, பெற்றோருக்கு குறுஞ்செய்தி வந்ததால், அதிர்ச்சியடைந்து, உறவினர், நண்பர்கள் வீட்டில் தேடியுள்ளனர். ஆனால், இரவு வரை கிடைக்கவில்லை. இது குறித்து, மாயமான அபினாஷின் தாய் பவானி அளித்த புகாரின்படி, சாத்தாங்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து, சிறுவனை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை