குழாய் உடைந்து சாலையில் வழிந்தோடி வீணான குடிநீர்
வளசரவாக்கம் வளசரவாக்கம் மண்டலம் 152வது வார்டில் கைகான்குப்பம் வ.உ.சி., தெரு அமைந்துள்ளது. இது, வளசரவாக்கம் மற்றும் ராமாபுரம் பகுதிகளை இணைக்கும் சாலையாக உள்ளது.மாநில நெடுஞ்சாலை துறை பராமரிப்பில் இருந்த இச்சாலை, தற்போது மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலை துறை சார்பில், இச்சாலையில் 20 கோடி ரூபாய்க்கு மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு, 1.50 கோடி ரூபாய் மதிப்பில் தார்ச்சாலை அமைக்கப்பட்டது.சேவை துறைகள் பணியால் சாலையில் தொடர்ந்து பள்ளங்கள் தோண்டப்பட்டு, சாலை கரடுமுரடாக மாறி உள்ளது. தற்போது, இச்சாலையில் இரு இடங்களில் குடிநீர் குழாய் உடைந்து, பல ஆயிரம் லிட்டர் குடிநீர், சாலையில் வழிந்தோடி குளம் போல் தேங்கி வீணானது.கோடைக்காலத்தில் குடிநீருக்காக மக்கள் அவதிப்படும் நிலையில், குடிநீர் வீணானது அதிருப்தியை ஏற்படுத்தியது.