உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கொழுந்துவிட்டு எரிந்த லாரி செங்குன்றத்தில் நெரிசல்

கொழுந்துவிட்டு எரிந்த லாரி செங்குன்றத்தில் நெரிசல்

செங்குன்றம், ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த கன்டெய்னர் லாரி, மாதவரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் இருந்து, ஆடைகளை ஏற்றிக் கொண்டு, செங்குன்றம் வழியே ஆந்திரா நோக்கி சென்றது. ஓட்டுநர்களாக ஹரியானாவைச் சேர்ந்த சாயன், 28, தோஜ்பூர், 28, ஆகியோர் பணியில் இருந்தனர். நேற்று மதியம் பாடியநல்லுார் சந்திப்பு அருகே சென்றபோது, லாரியின் இன்ஜின் பகுதியில் இருந்து கரும்புகை கிளம்பியது. சுதாரித்த ஓட்டுநர்கள், லாரியை சாலையிலேயே நிறுத்தி தப்பினர்.சற்று நேரத்தில் லாரி தீப்பிடித்து எரியத் துவங்கியது. தகவல் அறிந்து வந்த செங்குன்றம் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தினர். இதனால், லாரிக்குள் இருந்த ஜவுளிகள் பெரிதும் பாதிக்கப்படவில்லை. பேட்டரியில் ஏற்பட்ட கசிவால், லாரியின் முன் பகுதி முற்றிலும் நாசமானது.இதனால், அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ