சாலையில் சென்ற கார் திடீரென தீப்பற்றி நாசம்
பெருங்களத்துார், பெருங்களத்துார் அருகே, ஜி.எஸ்.டி., சாலையில் சென்று கொண்டிருந்த கார், திடீரென தீ பிடித்து எரிந்தது. இந்த விபத்தில், அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அய்யப்பன், 34. மதுரவாயலில் வசித்து வருகிறார். உறவினர் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்க, அறந்தாங்கிக்கு சென்ற அய்யப்பன், நேற்று அதிகாலை 'ஹுண்டாய் சான்ட்ரோ' காரில், சென்னைக்கு திரும்பினார். அவருடன், அவரது சித்தி உள்ளிட்ட மூன்று பேர் பயணம் செய்தனர். ஜி.எஸ்.டி., சாலையில், பெருங்களத்துார் அருகே வந்த போது, திடீரென காரின் இன்ஜின் பகுதியில் இருந்து புகை வெளியேறியது. அதை கண்ட அய்யப்பன், காரை சாலையோரம் நிறுத்திவிட்டு, அனைவரும் கீழே இறங்கினார். சற்று நேரத்தில், கார் தீப்பிடித்து எரிய துவங்கியது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். இதற்கிடையில், அவ்வழியாக சென்ற ஆட்டோ ஓட்டுனர்கள் சேர்ந்து, தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.Advertisementhttps://www.youtube.com/embed/DZexVr2-VC4இந்த விபத்தில், கார் முழுதும் எரிந்து சாம்பலானது. அதில் பயணித்தவர்கள் சுதாரித்து இறங்கியதால், அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் எற்படவில்லை. இது தொடர்பாக, பீர்க்கன்காரணை போலீசார் விசாரிக்கின்றனர்.