மருத்துவமனை டீன் புகார் வராகி மீது வழக்கு பதிவு
சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை டீன் தேரணி ராஜனை மிரட்டி பணம் பறிக்க முயன்றதாக வராகி மீது வழக்குப்பதவு செய்யப்பட்டுள்ளது.கொரோனா காலகட்டத்தில், தன்னை பற்றி சமூக வலைதளத்தில் தவறான தகவல்களை பரப்பி, வராகி 10 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டல் விடுத்தார் என, சென்னை ராஜிவ் அரசு மருத்துவ மனை டீன் தேரணிராஜன், மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து விசாரித்து, நான்கு பிரிவுகளில் நேற்று வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.