விளையாடிய குழந்தையிடம் 4 சவரன் காப்பு மாயம்
ஓட்டேரி :ஓட்டேரி அருகே கொசப்பேட்டை கந்தசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் மோகன்ராஜ், 32; மனைவி சுகன்யா. இவர்களுக்கு இரண்டு வயதில் மகன் உள்ளார். மகன் யாழன் கையில் 4 சவரனில் தங்க காப்பு அணிவித்திருந்தனர். அடுக்குமாடி குடியிருப்பின் 3வது மாடியில் வசிக்கும் யாழன், நேற்று முன்தினம் மாலை விளையாடியபடியே, பக்கத்து வீட்டின் அருகே தான் அணிந்திருந்த காப்பை கழற்றி வீசி எறிந்துள்ளான்.உடனே சுகன்யா பக்கத்து வீட்டிற்கு சென்று காப்பை கேட்டுள்ளார். தங்க காப்பு எதுவும் இங்கு விழவில்லை என, கூறியுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த சுகன்யா, ஓட்டேரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.