தம்பி, நண்பரை கடத்தியாக போலீசை குழப்பிய குடிமகன்
கோயம்பேடு, கோயம்பேடு பழச்சந்தையில் நின்றிருந்த இளைஞர் ஒருவர், தன் தம்பி மற்றும் நண்பரை, 'பைக்'கில் வந்த கும்பல் கடத்திச் சென்றதாக, நேற்று முன்தினம் இரவு கதறி அழுதுள்ளார். தகவலின்படி, கோயம்பேடு போலீசார் அங்கு சென்று அவரிடம் விசாரித்துள்ளனர்.இதில் அவர், அரியலுார் மாவட்டத்தைச் சேர்ந்த மோகன், 35, என்பதும், கோயம்பேடு சந்தையில் தங்கி கூலி வேலை செய்வதும் தெரிந்தது.மேலும், தன் தம்பி கோகுல், நண்பர் பிரேம் ஆகியோரை ஒரு கும்பல் கடத்திச் சென்றதாக, அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். அப்பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, மோகனுடன் நான்கு பேர் டாஸ்மாக் கடையில் மது அருந்தி விட்டு வெளியே வருவது தெரிந்தது. மேலும், கடத்தப்பட்டதாக கூறப்பட்ட அவர்கள் இருவரும், போதையில் கோயம்பேடு சந்தை 'டி பிளாக்'கில் படுத்திருந்தது தெரிந்தது.