உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சுரங்கபாலத்தில் சிக்கிய மாநகர பஸ்

சுரங்கபாலத்தில் சிக்கிய மாநகர பஸ்

வில்லிவாக்கம்:கனமழையால், வில்லிவாக்கம் சுரங்கபாலத்தில் தேங்கிய மழைநீரில் மாநகர சிற்றுந்து சிக்கியது.சென்னையில் நேற்று மற்ற இடங்களை விட அண்ணா நகர், வில்லிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால், ஒரு மணிநேரம் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது.அண்ணா மண்டலத்திற்கு உட்பட வில்லிவாக்கம் சுரங்கபாலத்தில் மழைநீர் தேங்கியது. அப்போது, அவ்வழியாக சென்ற. 'தடம் எண் - எஸ்43' மாநகர சிற்றுந்து, மழைநீரில் பாலத்தில் அடியில் சிக்கியது. பின், பயணியர் சிறிது துாரம் சிற்றுந்தை தள்ளி மேடான பகுதிக்கு கொண்டு சென்றனர். அதேபோல், அவ்வழியாக சென்ற ஆட்டோ, பைக்குகளும் தத்தளித்தன. மாலை வரை சுரங்கபாலத்தில் தண்ணீர் தேங்கி இருந்தது. பின் மோட்டாரை பயன்படுத்தி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ