உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / விரைவு ரயிலில் அடிபட்டு கல்லுாரி மாணவி உயிரிழப்பு

விரைவு ரயிலில் அடிபட்டு கல்லுாரி மாணவி உயிரிழப்பு

திருவள்ளூர், திருவள்ளூர் தொழுவூர் பகுதியைச் சேர்ந்தவர் மோகனசுந்தரம் மகள் சாய்ஸ்ரீ, 20. இவர், சென்னை வள்ளியம்மாள் கல்லுாரியில் பி.காம்., மூன்றாமாண்டு படித்து வந்தார். நேற்று காலை கல்லுாரி செல்ல, செவ்வாப்பேட்டை ரயில் நிலையத்திற்கு வந்தார். அப்போது, மொபைல் போனில் பேசியபடி ரயில் தண்டவாளத்தை கடந்த போது, சென்னை நோக்கி சென்ற காவிரி விரைவு ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார்.சடலத்தை கைப்பற்றிய திருவள்ளூர் ரயில்வே போலீசார், திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை