உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வெட்டுக்குத்தில் முடிந்த மது விருந்து: ஓட்டேரியில் விபரீதம்

வெட்டுக்குத்தில் முடிந்த மது விருந்து: ஓட்டேரியில் விபரீதம்

ஓட்டேரி: நண்பர்களின் மது விருந்து வெட்டு, குத்தில் முடிந்தது. ஒருவர் ஆபத்தான நிலையிலும், மற்றொருவர் பலத்த காயங்களுடனும் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஓட்டேரி, பட்டாளம், கோவிந்தபுரத்தைச் சேர்ந்தவர் சந்தீப் பட்டேல், 30. இவர் நேற்று முன்தினம் நண்பர்களுடன் சேர்ந்து, ஓட்டேரி டோபிகானா குடிசைப்பகுதி அருகே அமர்ந்து மது அருந்தினர். அப்போது, நண்பர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஆனந்த், வெற்றி என்பவருக்கு சொந்தமான ஆட்டோவில் இருந்த கத்தியை எடுத்து மூவரையும் சரமாரியாக வெட்டினார். பலத்த காயமடைந்த சந்தீப் பட்டேல், கவுதம் ஆகியோர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், சந்தீப் படேல் சுயநினைவு இன்றி, ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். கோபிநாத் என்பவர், சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். இதுகுறித்து, ஓட்டேரி போலீசார் வழக்குபதிந்து, ஓட்டேரியை சேர்ந்த பிரான்சிஸ், 38, என்பவரை கைது செய்தனர். கொளத்துாரைச் சேர்ந்த பாக்ஸர் ஆனந்த், 30, ஓட்டேரியை சேர்ந்த ஹென்றி, 22, உட்பட ஆறு பேரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி