உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆர்.கே.நகரில் குடிநீரேற்று நிலையம் ரூ.18 கோடி மதிப்பீடில் அமைகிறது

ஆர்.கே.நகரில் குடிநீரேற்று நிலையம் ரூ.18 கோடி மதிப்பீடில் அமைகிறது

ஆர்.கே.நகர்:ஆர்.கே.நகரில், 18 கோடி ரூபாய் செலவில், 13 எம்.எல்.டி., குடிநீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. தண்டையார்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட கொடுங்கையூர் குப்பை கிடங்கு, 1986ல் இருந்து பயன்படுத்தப்படுகிறது. தற்போது அங்கு, 60 அடி உயரத்திற்கு மலை போல் குப்பை குவிந்துள்ளது. இங்கு, பூமிக்கு அடியிலும், 10 அடி ஆழத்திற்கு குப்பை நிறைந்துள்ளதால், மழையின்போது, நிலத்தடி நீரில் கலக்கிறது. இதனால், கொருக்குப்பேட்டை, கொடுங்கையூர், தண்டையார்பேட்டை என, சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நிலத்தடி நீர் விஷத்தன்மை வாய்ந்ததாகவும் மாறியுள்ளது. தண்டையார்பேட்டை, படேல் நகரில் 10 எம்.எல்.டி., குடிநீரேற்று நிலையம் இயங்கி வருகிறது. இங்கிருந்து தினமும் 200க்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகள் மூலம் தண்டையார்பேட்டை, நேதாஜி நகர், ஆர்.கே.நகர், கொருக்குப்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள மக்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. ஆனால், போதுமானதாக இல்லை. ஆர்.கே.நகர் தொகுதியில் மக்கள் தொகை அதிகரித்துள்ளதால், அதற்கேற்ப தண்ணீர் தேவை அதிகரித்துள்ளது. இதனால் கொருக்குப்பேட்டை, பாரதி நகரில் புதிதாக இரண்டு ஏக்கர் பரப்பளவில், 18 கோடி ரூபாய் செலவில் 13 எம்.எல்.டி., குடிநீரேற்று நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. எம்.எல்.டி., என்பது மில்லியன் லிட்டர் அளவை குறிக்கிறது. அந்தவகையில் 1.30 கோடி லிட்டர் கொள்ளளவில் குடிநீரேற்று நிலையம் அமைக்கப்படுகிறது. விரைவில் பணிகள் முடிந்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ