உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / செய்திகள் சில வரிகள் -

செய்திகள் சில வரிகள் -

குட்கா விற்ற இரு கடைக்கு 'சீல்' வைப்பு பூந்தமல்லி: பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் ஊராட்சி கே.கே.நகரில் உள்ள கடைகளில், பூந்தமல்லி வட்டார உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள், நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, இரண்டு கடைகளி ல் குட்கா புகையிலை விற்றது தெரிய வந்தது. இரு கடைகளுக்கும் 'சீல்' வைத்த அதிகாரிகள் ஒரு கடைக்கு 50,000; மற்றொரு கடைக்கு 25,000 ரூ பாய் என, 75,000 ரூபாய் அபராதம் விதித்தனர். நர்சிங் ஹோம் ஊழியர்களை தாக்கிய மூவர் கைது எம்.ஜி.ஆர்., நகர்: எம்.ஜி.ஆர்., நகர் புகழேந்தி தெருவைச் சேர்ந்தவர் சதீஷ்குமார், 28; நெசப்பாக்கம் கானு நகரில் நர்சிங் ஹோமில் உள்ள மருந்தக பொறுப்பாளர். கடந்த 28ம் தேதி அதிகாலை, நர்சிங் ஹோம் வந்த மூன்று பேர், தகாத வார்த்தைகளில் பேசி, ஊழியர்களான சதீஷ்குமார், சரண்ராஜ், விமலேஷ் ஆகியோரை தாக்கினர். எம்.ஜி.ஆர்.நகர் போலீசார் விசாரித்து, நெசப்பாக்கத்தை சேர்ந்த தமிழரசன், 32, ராகுல் 35, மோகனசுந்தரம், 35 ஆகியோரை கைது செய்தனர். கத்தியுடன் அச்சுறுத்தல் இருவர் கைது அமைந்தகரை: அரும் பாக்கம், எம்.எம்.டி.ஏ., காலனியைச் சேர்ந்த சிவா, 20, அமைந்தகரைச் சேர்ந்த கார்த்திக், 27 ஆகியோர் அமைந்தகரை, மாநகராட்சி மைதானத்தில், நேற்று முன்தினம் நள்ளிரவு கத்தியை காட்டி பொதுமக்களை அச்சுறுத்தியுள்ளனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை