உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / விதிமீறிய கட்டுமான நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவு

விதிமீறிய கட்டுமான நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவு

சென்னை, ரியல் எஸ்டேட் சட்டப்படி, குடியிருப்பு திட்டத்தை பதிவு செய்யாத கட்டுமான நிறுவனத்துக்கு, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, ரியல் எஸ்டேட் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அம்பத்துாரில், 'துகர் ஹவுசிங்' நிறுவனம் சார்பில், 'லேக் துகர்' என்ற பெயரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படுகிறது. இதில் வீடு வாங்க, ஜெயந்தி என்பவர், பணம் செலுத்தி ஒப்பந்தம் செய்தார். இதற்கான ஒப்பந்தத்தில், குறிப்பிட்ட காலத்தில் அந்நிறுவனம் வீட்டை ஒப்படைக்கவில்லை. இது தொடர்பான வழக்கை விசாரித்த ரியல் எஸ்டேட் ஆணையம், 'மனுதாரர் செலுத்திய தொகையை வட்டியுடன் திருப்பித்தர வேண்டும்' என, 2023ல் உத்தரவிட்டது. இந்த உத்தரவை, கட்டுமான நிறுவனம் செயல்படுத்தாத நிலையில், மனுதாரர் ஜெயந்தி, ரியல் எஸ்டேட் ஆணையத்தில் மீண்டும் முறையிட்டார். இந்த மனுவை விசாரித்த ரியல் எஸ்டேட் ஆணைய தலைவர் ஷிவ்தாஸ் மீனா தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவு: இந்த குறிப்பிட்ட திட்டத்தை பதிவு செய்ய, ரியல் எஸ்டேட் ஆணையம் 2023ல் உத்தரவிட்டது. ஆனால், கட்டுமான நிறுவனம், இதுவரை பதிவு செய்யவில்லை. எனவே, ரியல் எஸ்டேட் சட்ட விதிகளை மீறியதற்காக, இதில் சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனத்துக்கு, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. செப்., 30க்குள், இத்திட்டத்தை ஆணையத்தில் பதிவு செய்வதுடன், அபராதத்தை செலுத்த வேண்டும்.Advertisementhttps://www.youtube.com/embed/DZexVr2-VC4மேலும், இந்த குடியிருப்பு திட்டத்துக்கு, சொத்து வரி மதிப்பீடு, கழிவு நீர் வடிகால்வாய் இணைப்பு போன்ற வசதிகளை, செப்., 30க்குள் முடித்து கொடுக்க வேண்டும். அத்துடன், மனுதாரரிடம் ஒரு மாதத்துக்குள் வீட்டை ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ