உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வீண் தகராறு செய்த 6 பேர் கும்பல் கைது

வீண் தகராறு செய்த 6 பேர் கும்பல் கைது

மதுரவாயல், தண்டலம் திரு.வி.க., நகரைச் சேர்ந்தவர் பிரசாந்த், 30. இவர், கடந்த 15ம் தேதி தன் நண்பருடன், நுாம்பலில் உள்ள காலி மைதானத்தில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த 6 பேர் கும்பல், பிரசாந்திடம் வீண் தகராறில் ஈடுபட்டனர். பின், பிரசாந்த் மற்றும் அவரது நண்பரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துச் சென்றனர். இதுகுறித்து மதுரவாயல் போலீசார் விசாரித்தனர். இதையடுத்து, தகராறில் ஈடுபட்ட தண்டலம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த பிரசாந்த், 26, தண்டலம் அண்ணாநகரைச் சேர்ந்த சந்தோஷ், 24, விக்னேஷ், 21, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தைச் சேர்ந்த சந்தோஷ்குமார், 25, நுாம்பலைச் சேர்ந்த ஸ்ரீநாத், 24, தண்டலம் ராஜிவ்காந்தி தெருவைச் சேர்ந்த அபினேஷ், 25, ஆகிய ஆறு பேரை கைது செய்தனர். இதில், பிரசாந்த் மற்றும் சந்தோஷ் குமார் மீது வழக்குகள் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை