உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நடைபயிற்சி சென்றவர் கார் மோதி உயிரிழப்பு

நடைபயிற்சி சென்றவர் கார் மோதி உயிரிழப்பு

பள்ளிக்கரணை, துரைப்பாக்கம், சாய்நகரை சேர்ந்தவர் தன்ராஜ், 42. இவர், அம்பத்துாரில் உள்ள ஐ.டி., நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.நேற்று காலை 5:45 மணிக்கு, துரைப்பாக்கம் - -பல்லவரம் சாலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டார்.அப்போது, பள்ளிகரணையில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே வந்தபோது, அவ்வழியே சென்ற ஸ்விப்ட் கார், அவர் மீது மோதியது. இதில், துாக்கிவீசப்பட்ட அவர், பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.விபத்து குறித்த தகவலின்படி, சம்பவ இடத்திற்கு வந்த பள்ளிகரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், அவரது உடலை கைபற்றி, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, வழக்கு பதிந்து, கார் டிரைவர் ஜெப்ரியை, 30, கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை