உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாநகராட்சியில் பள்ளியில் லிப்ட் முதல் முறையாக அமைகிறது

மாநகராட்சியில் பள்ளியில் லிப்ட் முதல் முறையாக அமைகிறது

ஜாபர்கான்பேட்டை:கோடம்பாக்கம் மண்டலம், 139 வது வார்டு ஜாபர்கான்பேட்டை பிள்ளையார் கோவில் தெருவில், சென்னை மாநகராட்சி உயர்நிலை பள்ளி உள்ளது. இங்கு, 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.இப்பள்ளி வளாகத்தில் சேதமடைந்திருந்த ஒரு கட்டடத்தை இடித்து அகற்றப்பட்டது. அங்கு, எட்டு கோடி ரூபாய் செலவில், நான்கு மாடி கட்டடம் கட்டப்பட உள்ளது.இதில், 20,600 சதுர அடி பரப்பளவில் 19 வகுப்பறைகள், நான்கு ஆய்வுக்கூடம், நான்கு ஆசிரியர்கள் அறை ஆகியவை அமைய உள்ளன. அத்துடன், சென்னை மாநகராட்சி பள்ளிகளில் முதல் முறையாக, இந்த கட்டடத்தில் மின்துாக்கி வசதியும் ஏற்படுத்தப்படுகிறது. புது கட்டடம் கட்டும் பணி துவங்கியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை