உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மின்சார ரயிலை இயக்க முயன்ற கும்பலால் தாம்பரத்தில் பரபரப்பு

மின்சார ரயிலை இயக்க முயன்ற கும்பலால் தாம்பரத்தில் பரபரப்பு

தாம்பரம், தாம்பரம் - சானடோரியம் இடையே, பராமரிப்பு பணிக்காக நின்றிருந்த மின்சார ரயிலில் ஏறிய மர்ம நபர்கள், ஹாரன் அடித்து, ரயிலை இயக்க முயற்சித்ததால், பரபரப்பு ஏற்பட்டது.தாம்பரம் ரயில் நிலையத்தில் பணிமனை உள்ளது. அங்கு மின்சார ரயில்களை நிறுத்தி, பராமரிப்பு பணிகளை மேற்கொள்வது வழக்கம்.நேற்று மாலை, பராமரிப்பு பணிக்கு செல்வதற்காக, சானடோரியம் ரயில் நிலையத்தை ஒட்டி, ஒரு மின்சார ரயில் நிறுத்தப்பட்டிருந்தது.மர்ம நபர்கள் சிலர், அந்த ரயிலில் ஏறி, ஹாரன் அடித்து ரயிலை இயக்க முயன்றனர். அவ்வழியாக சென்றவர்கள் இதை பார்த்து, ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.பாதுகாப்பு படையினர் விரைந்து, மர்ம நபர்களில் ஒருவரை மடக்கி பிடித்தனர். அவரை, பரங்கிமலை ரயில்வே பாதுகாப்பு படை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.அங்கு, அவரிடம் நடத்திய விசாரணைக்கு பின், பிடிபட்ட நபர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என போலீசார் தெரிவித்தனர். அவருடன் வந்த மர்ம நபர்களை, ரயில்வே பாதுகாப்பு படையினர் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !