போலீஸ் நிலையத்தில் ரவுடி அலப்பறை
புளியந்தோப்பு:புளியந்தோப்பு, கே.பி பார்க் பகுதியைச் சேர்ந்த ரவுடி ‛ஸ்பீட்' அஜித், 20. ஓட்டேரியில், நேற்று முன்தினம், மது போதையில் ரகளையில் ஈடுபட்டதால், அவரை ஓட்டேரி போலீசார் கைது செய்து, காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். நேற்று மதியம் சிறைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை போலீசார் எடுத்த போது, சிறுநீர் கழிப்பதற்கு அஜித், கழிவறைக்கு சென்றுள்ளார். அங்கு பினாயிலை எடுத்து குடித்துள்ளார். அஜித்தை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல போலீசார் முயன்றனர். அப்போது ஆம்புலன்ஸ் கண்ணாடிகளையும் உடைத்து ரகளையில் ஈடுபட்டுள்ளார். ஒரு வழியாக அஜித்தை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஓட்டேரி போலீசார் சேர்த்தனர்.