கடைகளில் அடுத்தடுத்து திருட்டு
சென்னை, மயிலாப்பூர், பஜார் சாலை முதல் தெருவைச் சேர்ந்தவர் முகமது இஸ்மாயில், 48; லஸ் கார்னர் சிறுகடை வியாபாரிகள் சங்கச் செயலர். லஸ் கார்னரில் உள்ள அவரது கடையை, நேற்று காலை திறக்க வந்தபோது, மர்மநபர்கள் தார்பாயை பிளேடால் கிழித்து, ஆடை மற்றும் காலணிகளை திருடிச் சென்றது தெரிய வந்தது. அதேபோல், அடுத்தடுத்து ஏழு கடைகளிலும் மர்மநபர்கள் கைவரிசை காட்டியது தெரியவந்தது.இதுகுறித்து, மயிலாப்பூர் போலீசார் வழக்கு பதிந்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை வைத்து, கைவரிசை காட்டியது யார் என விசாரித்து வருகின்றனர்.