உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ராணுவ வீரரிடம் கைப்பை பறிப்பு

ராணுவ வீரரிடம் கைப்பை பறிப்பு

சென்னை, மெரினா எம்.ஜி.ஆர்., சமாதி அருகே, சாலையை கடக்க முயன்ற ராணுவ வீரரின் கைப்பையை பறித்துச் சென்ற மர்ம நபர்கள் இருவரை, போலீசார் தேடி வருகின்றனர்.சென்னை, சர்வீஸ் மேன் வெல்பர் ஆபீஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் மனோஜ்குமார், 40; ராணுவ வீரர். நேற்று முன்தினம் இரவு தன் குடும்பத்துடன், மெரினாவிற்கு சென்றார். பின், வீட்டிற்கு திரும்ப, எம்.ஜி.ஆர்., சமாதி அருகே சாலையை கடக்க முயன்றார்.அப்போது, அவ்வழியாக இருச்சக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள், அவரது கைப்பையை பறித்து தப்பினர். அதில் அவரது ராணுவ அடையாள அட்டை மற்றும் பணம் இருந்துள்ளது. இதுகுறித்த புகாரின்படி, அண்ணா சதுக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை