உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அதிவேகமாக வந்த கார் பெயர் பலகையில் மோதல்

அதிவேகமாக வந்த கார் பெயர் பலகையில் மோதல்

சென்னை, : அண்ணாசாலையில் அதிவேகமாக சென்ற கார், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலை பெயர் பலகையில் மோதியது.தேனாம்பேட்டை அண்ணாசாலையில், நேற்று முன்தினம் இரவு அதிவேகமாக சென்ற கார், சாலை பெயர் பலகையில் மோதி விபத்துக்குள்ளானது.இதில் உருக்குலைந்த காரில் சிக்கிய இளைஞரை, பொதுமக்கள் உதவியுடன் போலீசார் மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.விசாரணையில், விபத்தில் காயமடைந்தவர் மண்ணடியைச் சேர்ந்த சாய் கிருஷ்ணன், 18, என தெரிந்தது. இச்சம்பவத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. சம்பவம் குறித்து பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை