உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஓட்டுனரை கத்தியால் அறுத்து கொலை செய்த வாலிபர் கைது

ஓட்டுனரை கத்தியால் அறுத்து கொலை செய்த வாலிபர் கைது

அமைந்தகரை, அமைந்நகரை, ஆசாத் நகர், ராஜகோபாலன் தெருவைச் சேர்ந்தவர் தமீம் அன்சாரி, 47; ஆட்டோ ஓட்டுநர். இவரது எதிர் வீட்டில் வசிப்பவர் முகமது முக்தர், 31.நேற்று மாலை, தமீம் அன்சாரியின் வீட்டின் வெளியில், தண்ணீர் ஊற்றி கழுவியுள்ளார். தண்ணீர், முகமது முக்தர் வீட்டின் முன் சென்றுள்ளது. இதனால் தமீம் அன்சாரிக்கும், முகமது முக்தருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த முகமது முக்தர், வீட்டில் இருந்த காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து வந்து, தமீம் அன்சாரியில் கழுத்தில் குத்தியதாக கூறப்படுகிறது.ரத்த வெள்ளத்தைக் கிடந்த தமீம் அன்சாரியை, அங்கிருந்தோர் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்ததாக கூறினர்.அமைந்தகரை போலீசார், முகமத் முக்தரை நேற்று மாலை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை