மேலும் செய்திகள்
போதை மாத்திரை விற்ற 6 பேர் கைது
20-Nov-2024
பட்டினப்பாக்கம், பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் சையது சிலான். இவரது மகன் சையது குலாம், 23. இவர் தனியார் நிறுவனத்தில் எலக்ட்ரீஷியனாக பணிபுரிந்தார்.வேலை முடிந்து நேற்று இரவு 9:30 மணியளவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, குடிசை மாற்றுவாரிய குடியிருப்பின் நான்காவது மாடியின் பால்கனி இடிந்து, குலாம் மீது விழுந்தது. இதில் படுகாயமடைந்த குலாமை, அப்பகுதியினர் மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு, சிகிச்சை பலனின்றி குலாப் இறந்தார். சம்பவம் குறித்து பட்டினப்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
20-Nov-2024