உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வீடு புகுந்து நகை திருடிய எண்ணுார் வாலிபர் கைது

வீடு புகுந்து நகை திருடிய எண்ணுார் வாலிபர் கைது

எண்ணுார்:எண்ணுார், தாழங்குப்பம், அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ், 30. கடந்த 6ம் தேதி, வீட்டின் கதவை திறந்து வைத்து துாங்கிக் கொண்டிருந்தார்.அதிகாலை 3:00 மணிக்கு, பீரோவை திறக்கும் சத்தம் கேட்டுள்ளது. எழுந்து பார்த்தபோது, வாலிபர் ஒருவர் தப்பியோடியுள்ளார்.சந்தேகமடைந்தவர், பீரோவில் பார்த்தபோது, ஏழு கிராம் தங்க நகை, 12 கிராம் வெள்ளி வளையல் உள்ளிட்டவை திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இது குறித்து, எண்ணுார் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.போலீசாரின் விசாரணையில், எண்ணுார், சத்தியவாணி முத்து நகரைச் சேர்ந்த சூர்யா, 22, என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. நேற்று அவரை போலீசார் கைது செய்தனர்.கைதான சூர்யா மீது, எண்ணுார், கொருக்குப்பேட்டை, ஆந்திரா - குண்டூர் காவல் நிலையங்களில், வழக்குகள் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை