உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குன்றத்துார் முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை கோலாகலம்

குன்றத்துார் முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை கோலாகலம்

குன்றத்துார், குன்றத்துார் முருகன் கோவிலில், ஆடி கிருத்திகை விழா நேற்று கோலாகலமாக நடந்தது. குன்றத்துார் மலை மீது, பிரசித்திபெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இங்கு, ஆடி கிருத்திகையை முன்னிட்டு, நேற்று காலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. இதை தொடர்ந்து, மூலவருக்கு தங்க கவசம் அணிவித்து, விபூதி காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் முருகனை தரிசித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். கோவிலின் நுழைவு வாயிலில், கொடி மரம் அருகே நுாறு கிலோ சந்தனத்தால் வடிவமைக்கப்பட்ட வள்ளி, தெய்வானையுடன் வடிவமைக்கப்பட்ட முருகப்பெருமானை, பக்தர்கள் தரிசனம் செய்து, தங்கள்மொபைல் போனில் புகைப்படம் எடுத்து சென்றனர். கோவில் நிர்வாகம் சார்பில், 10,000 லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து, இரவு முருகப்பெருமான் வீதி உலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை