உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மெக்கானிக் கொலை வழக்கு தலைமறைவு நபர் பிடிபட்டார்

மெக்கானிக் கொலை வழக்கு தலைமறைவு நபர் பிடிபட்டார்

திருவொற்றியூர்:திருவொற்றியூர், கலைஞர் நகர் 9வது தெருவைச் சேர்ந்தவர் அஜய், 25; பைக் மெக்கானிக். இவர், 8ம் தேதி, 11வது தெரு காலிமனை ஒன்றில், கத்திக்குத்து காயங்களுடன் இறந்து கிடந்தார்.சாத்தாங்காடு போலீசாரின் விசாரணையில், ஓராண்டிற்கு முன் ஏற்பட்ட தகராறின் முன்பகையால், அஜய்யின் நண்பரான திருவொற்றியூர், ராஜா சண்முகம் நகரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் தினேஷ், 28, கொலை செய்தது தெரிய வந்தது.கடந்த 7ம் தேதி இரவு அஜய்யை மது அருந்த வரவழைத்த தினேஷ், அங்கு ஏற்பட்ட கைகலப்பில் அவரை கொலை செய்துள்ளார். தினேைஷ போலீசார் கைது செய்தனர்.இந்த வழக்கில், தினேஷுடன் மது அருந்திய தண்டையார்பேட்டையைச் சேர்ந்த இப்ராஹிம் கலீல் உல்லா, 31, கொலையில் தொடர்புடையவராக கருதப்பட்ட நிலையில், அவர் தலைமறைவானார்.இதையடுத்து, இப்ராஹிமின் மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொண்டு தனிப்படை போலீசார் பேசினர். அதில், விருத்தாசலத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு, ரயிலில் செல்வது தெரியவந்தது.பின், அவரிடம் நைசாக பேச்சு கொடுத்து, எழும்பூர் ரயில் நிலையம் வரவழைத்து, நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ