உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தலைமறைவு குற்றவாளி கைது

தலைமறைவு குற்றவாளி கைது

வில்லிவாக்கம், வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர் சதீஷ், 29. கடந்த 2022ம் ஆண்டில் நடந்த கொலை முயற்சி வழக்கில் சிக்கி, வில்லிவாக்கம் போலீசார் சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கு விசாரணை, எழும்பூர், பெருநகர 13வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.இந்நிலையில், ஜாமினில் சிறையிலிருந்து வெளியே வந்த சதீஷ், வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார். இதையடுத்து அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த, கடந்த மார்ச் மாதம் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, வில்லிவாக்கம் போலீசார், சதீஷை கைது செய்து, நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ