உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தலைமறைவு குற்றவாளி சிக்கினார்

தலைமறைவு குற்றவாளி சிக்கினார்

சைதாப்பேட்டை,சைதாப்பேட்டை, பாரதி நகரைச் சேர்ந்த செந்தில்குமார் மனைவி மோகனா, 22; ஏழு மாத கர்ப்பிணி. கடந்த 2012 டிச., மாதம் இறந்த செந்தில்குமாரின் தாயின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியின்போது, செந்தில்குமாரின் மொபைல் போன் தொலைந்துள்ளது.இதில் ஏற்பட்ட தகராறில், மோகனா மற்றும் அவரது தந்தையை, செந்தில்குமார் தகாத வார்த்தையில் பேசி உள்ளார். இதில் மனமுடைந்த மோகனா, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சைதாப்பேட்டை போலீசார், செந்தில்குமாரை கைது செய்தனர். ஜாமினில் வெளிவந்த செந்தில்குமார் தலைமறைவானார்.இதனால், 2015 டிசம்பர் மாதம் அவர் மீது நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்திய நிலையில், நேற்று சைதாப்பேட்டை வந்த செந்தில்குமாரை, போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி