மேலும் செய்திகள்
பெரியகுளம் கவுமாரியம்மன் கோயிலில் பாலாலய பூஜை
22-Oct-2024
பலகார கடைகளில் உணவு துறை ஆய்வு
29-Oct-2024
சென்னை,சென்னை பாரிமுனை, காளிகாம்பாள் கோவிலில், புதிய வெள்ளித்தேர் செய்ய, தகடு வேயும் பணிகளுக்கு உபயதாரரால் வழங்கப்பட்ட, 90 கிலோ வெள்ளிக் கட்டிகளை, கோவில் நிர்வாகத்திடம் அமைச்சர் சேகர்பாபு வழங்கினார்.பின், அவர் அளித்த பேட்டி:இந்த ஆட்சியில், 29 கோடி ரூபாயில் ஐந்து தங்கத்தேர், 27 கோடி ரூபாயில், 9 வெள்ளித்தேர்கள் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. அதில், பெரியபாளையம் தங்கத்தேர், திருத்தணி வெள்ளித்தேர் பணி முடிந்து, பயன்பாட்டில் உள்ளது.மற்ற வெள்ளித்தேர்களில், காளிகாம்பாள் கோவில் வெள்ளித்தேரும் ஒன்று. இத்தேர், 2.50 கோடி ரூபாயில் பணிகள் துவங்கப்பட்டு, மரத்தேர் பணிகள் முடிந்துள்ளது. வெள்ளித்தகடு வேயும் பணிக்கு, 277 கிலோ வெள்ளி பயன்படுத்தப்படுகிறது.அதில், 133 கிலோ வெள்ளிக் கட்டிகள், உபயதாரர் வாயிலாக வழங்கப்பட்டு பணிகள் துவக்கப்பட்டன. தற்போது, 90 கிலோ வெள்ளிக் கட்டிகள் வழங்கப்பட்டுள்ளன. தேருக்கு தேவைப்படும் வெள்ளிக் கட்டிகளை வழங்க, உபயதாரர்கள் தயாராக உள்ளனர்.இந்த புதிய வெள்ளித் தேரின் பணிகள் முழுமையாக நிறைவுற்று, முதல்வர் பிறந்தநாளான மார்ச் 1ல்,பக்தர்கள் பயன்பாட்டிற்கு வரும்.இவ்வாறு சேகர்பாபு கூறினார்.
22-Oct-2024
29-Oct-2024