உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நடுநிலை பள்ளிக்கு ரூ.20 லட்சத்தில் கூடுதல் வகுப்பறை

நடுநிலை பள்ளிக்கு ரூ.20 லட்சத்தில் கூடுதல் வகுப்பறை

திருவொற்றியூர், திருவொற்றியூர் மண்டலம், நான்காவது வார்டில், ராமநாதபுரம் சென்னை நடுநிலைப் பள்ளி செயல்படுகிறது. எட்டாம் வகுப்பு வரை 550 மாணவ - மாணவியர் பயில்கின்றனர்.இப்பள்ளிக்கு வகுப்பறை இடப்பற்றாக்குறை உள்ளது. இது குறித்து, பள்ளி தலைமை ஆசிரியை முத்துசெல்வி, நான்காவது வார்டு மார்க்.கம்யூ., கட்சி கவுன்சிலர் ஜெயராமனுக்கு கோரிக்கை வைத்தார்.அதன்படி, மாமன்ற கவுன்சிலர் நிதியான 20 லட்சம் ரூபாய் செலவில், கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்ட, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. நேற்று, புதிய வகுப்பறை கட்டுமான பணிக்கான பூமி பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்