உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் சிறுவர்களுக்கு அட்வைஸ்

வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் சிறுவர்களுக்கு அட்வைஸ்

கானத்துார், இ.சி.ஆர்., கானத்துார், அஜ்மர்கான் நகரைச் சேர்ந்தவர் பாத்திமா பானு, 52. நேற்று முன்தினம் இரவு, இவரது மொபைல் போனில் தொடர்பு கொண்ட நபர், வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது சிறிது நேரத்தில் வெடிக்கும் எனக்கூறி உள்ளார்.இதையடுத்து கானத்துார் போலீசார், வெடிகுண்டு நிபுணர்களுடன் சென்று, பாத்திமா பானு வீட்டில் சோதனை மேற்கொண்டனர். ஒரு மணி நேரம் நடத்திய சோதனையில், மிரட்டல் வெறும் புரளி என தெரிந்தது.போலீசார் விசாரணையில், துரைப்பாக்கம், கஸ்டம்ஸ் காலனியைச் சேர்ந்த வரதராஜன் என்பவரின், 12 வயது மகன் என தெரிந்தது.சிறுவன் சக நண்பனுடன் சேர்ந்து, தந்தையின் மொபைல் போனில் உத்தேசமாக மொபைல் நம்பர் டைப் செய்து, வெடிகுண்டு மிரட்டல் விடுத்து 'பிராங்கால்' செய்தது தெரிந்தது. போலீசார், சிறுவர்களை அழைத்து கண்டித்ததுடன், உரிய புத்திமதி கூறி அனுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ