உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அடையாறு மேம்பாலம் இருவழியாக மாற்றம்

அடையாறு மேம்பாலம் இருவழியாக மாற்றம்

அடையாறு,:அடையாறு சந்திப்பு மேம்பாலத்தில், திரு.வி.க., பாலத்தில் இருந்து, கிண்டி மற்றும் திருவான்மியூர் நோக்கி செல்லும் வகையில் போக்குவரத்து இருந்தது. இதனால், கீழ் சாலையில் போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறைந்தது. தற்போது கீழ் சாலையில், ஆவின் அருகே, மெட்ரோ ரயில் பணி நடக்கிறது. இதனால், கீழ் பக்க சாலையில் தடுப்பு அமைத்ததால், அகலம் குறைந்தது.இதன் காரணமாக, கிண்டியில் இருந்து திரு.வி.க., பாலம் நோக்கி செல்லும் வாகனங்களால் நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, கிண்டியில் இருந்து திரு.வி.க., பாலம் நோக்கி, மேம்பாலம் வழியாக செல்லும் வகையில் மைய தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.மேம்பாலத்தை இருவழிபாதையாக மாற்றியதால், கீழ் சாலையில் நெரிசல் குறைந்துள்ளதாக, போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !